கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இன்னும் மக்கள் விடுபடாத நிலையில் அடுத்ததாக கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, என இரண்டு புதிய நோய்கள் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சையால் நாடு முழுவதும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ''கருப்பு பூஞ்சை பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் அதை சமாளிப்பது என்பது அரசுக்கு மிகப்பெரிய சவலாகிவிடும். எனவே கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தினை போதுமான அளவில் இருப்பு வைத்துக் கொள்ளவும், இந்நோயினை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கவும், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கோரிக்கை விடுத்துள்ளார்.