17 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு - உலக நிலவரம்!

சனி, 29 மே 2021 (08:20 IST)
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 17 கோடியைக் கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
உலக அளவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17 கோடியைக் கடந்துள்ளது. மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 15.19 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
 
அதோடு, வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 35.37 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 1.44 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 93 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
 
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்