தமிழிசையிடம் கேள்வி எழுப்பிய ஆட்டோ ஒட்டுனருக்கு அடி, உதை

Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2018 (19:53 IST)
தமிழக பாஜக தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவரிடம் கேள்வி எழுப்பிய ஆட்டோ ஓட்டுனரை பாஜகவினர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
அதிகரித்து வரும் பெட்ரோலின் விலை நாடெங்கும் வாகன ஓட்டிகளுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.85 ஆக உயர்ந்துள்ளது. 
 
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டோ டிரைவர் பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூறாமல் தமிழிசை சிரித்து சமாளித்தார். ஆனால், அங்கிருந்த பாஜகவினர் அந்த ஆட்டோ டிரைவரை, வயதானவர் என்றும் பாராமல் அடித்து இழுத்து சென்றனர். அவரின் கன்னத்தில் சிலர் அறைந்ததாக கூறப்படுகிறது.

 
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அந்த ஆட்டோ ஓட்டுனர், பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் வருமானம் பெட்ரோல் போடவே சரியாக இருந்தால், வீட்டிற்கு எதை எடுத்து செல்வது? இதுபற்றி கேட்டால் என்னை பாஜகவினர் அடிக்கின்றனர் என புலம்பியதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்