எத்தனை தடவை கைது பண்ணுனாலும் அடங்க மாட்டோம்! – இன்று செங்கல்பட்டில் வேல்யாத்திரை!

Webdunia
திங்கள், 9 நவம்பர் 2020 (08:12 IST)
தமிழகத்தில் பாஜக வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் திருத்தணி, திருவொற்றியூர் கைதுகளை தொடர்ந்து செங்கல்பட்டில் வேல்யாத்திரை நடக்க உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நவம்பர் 6 தொடங்கி டிசம்பர் 6 வரை பாஜகவின் வேல் யாத்திரை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் தடையை மீறி கடந்த வெள்ளிக்கிழமை திருத்தணியில் யாத்திரை தொடங்கிய பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர். அதை தொடர்ந்து திருவொற்றியூரிலும் யாத்திரை நடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் வேல் யாத்திரை நடத்தியே தீருவோம் என பாஜக தமிழக தலைவர் எல்,முருகன் கூறியுள்ள நிலையில் இன்று செங்கல்பட்டில் வேல் யாத்திரை நடப்பதாக பாஜக அறிவித்துள்ளது. இதனால் அனுமதி மீறி யாத்திரை நடத்துவதற்காக இன்றும் கைது சம்பவங்கள் நடைபெறலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்