ரூ 6 லட்சம் கடனுக்காக துணை நடிகர் மனைவியை அடைத்து வைத்த பாஜக நிர்வாகி கைது..!

Mahendran
வியாழன், 15 பிப்ரவரி 2024 (11:44 IST)
6 லட்ச ரூபாய் வாங்கிய கடனை கொடுக்கவில்லை என்பதற்காக பாஜக பெண் நிர்வாகி ஒருவர் துணை நடிகரின் மனைவியை அறையில் அடைத்து வைத்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி சேர்ந்த மதியழகன் என்பவர் திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து வரும் நிலையில் அவரது மனைவி மாலதி திருச்சியிலேயே தங்கி வருகிறார். கணவருக்கு சரியான வருமானம் இல்லாததால் அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது.

அந்த வகையில் பாஜக நிர்வாகி உமாராணி என்பவரிடம் ஆறு லட்சம் ரூபாய் கடன் வாங்கிய நிலையில் கொடுத்த கடனை மாலதி திருப்பி கொடுக்காததால் அவரிடம் உமாராணி கடனை கேட்டுள்ளார்.  ஆனால் மாலதி கடனை கொடுக்காமல் இழுத்தடித்த நிலையில், திடீரென பணத்தை கொடுத்தால் தான் வெளியே விடுவேன் என ஒரு அறையில் மாலதியை உமாராணி அடைத்து வைத்ததாக தெரிகிறது.

இது குறித்து தகவல் அடைந்த மாலதியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் உமாராணியை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மாலதியையும் அவர்கள் மீட்டு உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்