ரஜினியை திடீரென சந்தித்த பாஜக ஆதரவாளர் மாரிதாஸ்

வெள்ளி, 13 மார்ச் 2020 (12:06 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தனது செய்தியாளர் சந்திப்பின்போது தனது அரசியல் கண்ணோட்டம் குறித்து விரிவாக பேசினார். ஆட்சிக்கு ஒரு தலைமை கட்சிக்கு ஒரு தலைமை என்றும், தான் முதலமைச்சர் பொறுப்பை ஏற்க போவதில்லை என்றும், தேர்தல் முடிந்தவுடன் ஏராளமான பதவிகள் பாதிக்கப்படும் என்றும், தமிழகத்தில் ஒரு புதிய புரட்சி மற்றும் எழுச்சி பெற வேண்டும் என்றும், அந்த அதிசயம் அற்புதம் நடக்கும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்திருந்தார்
 
ரஜினியின் அரை மணி நேரப் பேச்சு இன்றுவரை தமிழக ஊடகங்களில் தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ரஜினி தனது அரசியல் குறித்து பரபரப்பாக பேசிய அடுத்த நாளே பாஜக ஆதரவாளரான மாரிதாஸ் இன்று ரஜினியை சந்தித்து பேசியுள்ளார் 
 
இருவரும் என்ன பேசினார்கள் என்பது குறித்த தகவல் எதுவும் வெளிவரவில்லை என்றாலும் மாரிதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ’இனிய சந்திப்பு நடந்தது’ என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். திமுகவை கடுமையாக தாக்கியும் பாஜகவின் ஆதரவாளராகவும் இருந்து வரும் மாரிதாஸ் ரஜினிகாந்தை இன்று நேரில் சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சந்திப்பு இனிதே முடிந்தது.. pic.twitter.com/KvxaUcImSH

— Maridhas (@MaridhasAnswers) March 13, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்