கடந்த 2017 ஆம் ஆண்டு கட்சி தொடங்குவது உறுதி என்று அறிவித்திருந்த ரஜினி, படங்களில் நடித்தவாறே அரசியல் செயல்பாடுகளையும் கவனித்து வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் தனது மாவட்ட நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதன் பின்னர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து தனது அரசியல் திட்டங்களை அறிவித்தார்.
ஆனால், கடைசி வரை கட்சி துவங்குவது குறித்து உறுதியான எந்த கருத்தையும் ரஜினிகாந்த் தெரிவிக்கவில்லை. இந்த சந்திப்பின் போது சிஸ்டத்தை மாற்ற வேண்டும் எனவும், திமுக, அதிமுக ஆகிய தமிழகத்தின் இரு பெரும் கட்சியினை விமர்சித்தார்.
அதிலும் குறிப்பாக, கருணாநிதி என்ற மிகப்பெரிய ஆளுமை இப்போது இல்லை. அவருடைய வாரிசு என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். வரும் 2021 ஆம் ஆண்டு தேர்தல் திமுகவிற்கு வாழ்வா? சாவா? போன்றது என பேசியிருந்தார்.