நடிகர் வடிவேலு தீவிரமாக சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகப்போகின்றன. இந்நிலையில் தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கோவில்களுக்கு சென்று வழிப்பட்டு வருகிறார். அதன் ஒரு கட்ட்மாக அவர் நேற்று திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று வழிபட்டார். அதன் பின்னர் அங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது ரஜினியின் அரசியல் வருகை குறித்து கேட்டபோது ‘ரஜினி கட்சி ஆரம்பிப்பாரா என்று அவருக்கும் தெரியவில்லை. நமக்கும் தெரியாது. அவர் சொல்வது போல கட்சி, ஆட்சி ஆகியவற்றுக்கு தனித்தனியான தலைமை என்பது நல்ல விஷயம்தான். என் கணிப்புப்படி நான் 2021-ல் முதல்வராக ஆகிவிடுவேன் என்று நினைக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.