மரியாதையா பேசுங்க சீமான்: எச்சரித்த பாஜக பிரமுகர்

Webdunia
வியாழன், 25 மே 2017 (05:23 IST)
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் நேற்று தனியார் செய்தி தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவருடன் கலந்து கொண்ட பாஜக பிரமுகர் டி.ராகவனை சீமான் ஒருமையில் பேசினார்.



 


அதற்கு பதிலளித்த டி.ராகவன், சீமான் அவர்களே மரியாதையாக பேசவும், நீ, வா, போ என ஒருமையில் பேச கூடாது. நீங்கள் என்ன நேரடியாக, சீமானாகவா கட்சி ஆரம்பித்தீர்கள், உங்களை ஒரு இயக்குனராகத்தான் முதலில் மக்களுக்கு தெரியும், திரைத்துறையில் இருந்து வந்தவர் தான் நீங்களும்

தமிழ், தமிழர் என்று பேசி வரும் உங்களை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, உங்களுக்கு எத்தனை பேர் ஓட்டு போட்டார்கள் என்று காரசாரமாக பேசினார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய சீமானின் நிலை பரிதாபமாக இருந்ததை நேரடி ஒளிபரப்பில் காண முடிந்தது.

ஏற்கனவே தந்திடிவி பாண்டேவுடன் நடந்த நேர் காணலில் காவிரி பிரச்சனை குறித்த கேள்வி ஒன்றுக்கு திணறினார் என்பது நாடே அறிந்ததுதான்.
அடுத்த கட்டுரையில்