தமிழக முதல்வர் புட்போர்டு கலாச்சாரத்தை ஒழிப்பாரா? பாஜக பிரபலம் கேள்வி

ஞாயிறு, 5 நவம்பர் 2023 (14:28 IST)
அம்மையார் ஜெயலலிதா அவர்கள், தன் இரும்புக்கரம் கொண்டு ஈவ்டீசிங்கை இளைஞர்கள் மத்தியில் ஒழித்தார். அதுபோல், தமிழக முதல்வர் முக ஸ்டாலின்  அவர்கள் புட்போர்டு கலாச்சாரத்தை ஒழிப்பாரா? என பாஜக பிரபலம் அர்ஜூனா மூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

தமிழக அரசு அந்நிய முதலீடுகளை விரும்பி, வேண்டிப்பெற துடிக்கிறது. அதற்காக, வளர்ந்த நாடுகளைப் போல் உலகப் பார்வையில் ஸ்மார்ட் சிட்டி செயல்படுத்தி வேஷம் போடுகிறது.

தமிழக மக்கள் ஸ்மார்ட்டான வாழ்வாதாரத்திலும் பொது கட்டுப்பாட்டுடனும் வசிக்கிறார்கள் என்ற நம்பிக்கையை, உண்மையில் நாம் உலக அரங்கில் வெளிப்படுத்தாவிட்டால் எங்கனம் அதிக முதலீடுகளை பெற முடியும்?

நாங்கள் இளைஞர்களாக இருந்த காலத்தில் பெற்றோர்களின் கண்டிப்புக்கும், அரசாங்க விதிகளுக்கும் கட்டுப்பட பழகி இருந்ததால் ஒற்றுமை உணர்வு மேலோங்கி இருந்தது.

ஆனால் இன்றைய சமுதாயம் பொது சுதந்திரம் என்ற பெயரில் தாந்தோனியாக வாழ எத்தணிப்பது தமிழக எதிர்காலத்தை நரகமாக்கவல்லது!

அம்மையார் ஜெயலலிதா அவர்கள், தன் இரும்புக்கரம் கொண்டு ஈவ்டீசிங்கை இளைஞர்கள் மத்தியில் ஒழித்தார். அதுபோல், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் புட்போர்டு கலாச்சாரத்தை ஒழிப்பாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்