அண்ணாமலை டெல்லியில் உள்ள நிலையில் திடீரென சென்னையில் பாஜக பொறுப்பாளர்கள் கூட்டம்..!

செவ்வாய், 3 அக்டோபர் 2023 (09:54 IST)
அண்ணாமலை ஊரில் இல்லாத நிலையில் அதாவது டெல்லியில் உள்ள நிலையில்  பாஜக பொறுப்பாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சென்னையில் பாஜக தலைமையகத்தில் பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் தலைமை ஏற்க இருக்கின்றார் என்றும், இந்த கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள் கலந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.
 
தி. நகரில் உள்ள கமலாலயத்தில் அண்ணாமலை டெல்லியில் உள்ள நிலையில் திடீரென பாஜக பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்