மாநில தலைவர் பதவி வெங்காயம் போன்றது: அண்ணாமலை

ஞாயிறு, 1 அக்டோபர் 2023 (16:13 IST)
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது என  அண்ணாமலை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாஜக மற்றும் அதிமுக கூட்டணி முறிவடைந்துள்ள நிலையில் அண்ணாமலையின் தலைமை பதவிக்கு ஆபத்து என்றும் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு புதிய நபரை நியமனம் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. 
 
இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை  தமிழக பாஜக மாநில தலைமை பதவி என்பது வெங்காயம் போன்றது என்றும் கட்சியை வலுப்படுத்துவது மட்டுமே எனது நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் கூட்டணி பற்றி கட்சி மேலிடம் முடிவெடுக்கும் என்று கூறிய அவர், அனுசரித்து செல்லும் பழக்கம் என்னிடம் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்