மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவ உருவப்படத்திற்கும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதிமுக ஆட்சியில் இல்லாமல் 2017ல் நடந்திருக்க வேண்டும். ஆனால் பாஜக உதவியால் தான் பழனிச்சாமி ஆட்சி நடத்தினார். அமுமுகவுக்கு ஏற்படும் பின்னடைவுகளை இதனை நான் பின்னடைவாக பார்க்கவில்லை. ஒரு அனுபவமாகத்தான் எடுத்து கொண்டுள்ளேன்.பாஜகவை விட்டு விலகினால் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சின்னாபின்னமாகி விடும். பழனிச்சாமி தன் மீது கொள்ளிக்கட்டையை வைத்தது போல ஆகிவிடும்.பாஜகவை விட்டு விலகியதற்கா தண்டனையை பழனிச்சாமி அனுபவிப்பார்.சசிகலா யாருக்கும் பயந்து வீட்டிற்குள் இருப்பவர் இல்லை. அவர் சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அதிமுகவில் இன்றும் எங்கள் ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர். அவர்கள் தேவையான நேரத்தில் தேவையான தகவல்களை தருவார்கள்.பாஜகவை விட்டு வெளியே வந்த பழனிச்சாமி மெகா கூட்டணி யாரோடு அமைக்க போகிறார். இரட்டை இலை முடக்கமாக வாய்ப்புள்ளது. அதிமுக வருங்காலத்தில் நெல்லிக்காய் மூட்டை போல சிதற போகிறது.