அதிமுக தோல்விக்கு பாஜகவே காரணம்: முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்!

Webdunia
புதன், 7 ஜூலை 2021 (07:56 IST)
சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு பாஜகவுடன் கூட்டணி அமைத்ததே காரணம் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நேற்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியபோது நான் மூன்றாவது முறையாக ஆட்சி கட்டிலில் அமர்ந்து இருப்போம் என்றும் ஆனால் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் பாஜக கூட்டணி தான் என்றும் அவர் கூறினார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
மேலும் இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேசியபோது அதிமுகவின் வாக்குறுதிகள் மக்களிடம் போய் சேரவில்லை என்று கூறினார். திமுகவின் வாக்குறுதிகளை மக்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டது தான் அதிமுகவின் தோல்விக்கு காரணம் என்றும் அதிமுகவின் வாக்குறுதிகள் மக்களிடம் போய் சேர்க்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்