இன்னும் 200 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது: ராதாரவி

Webdunia
திங்கள், 25 டிசம்பர் 2017 (00:14 IST)
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் முடிவு பல உண்மைகளை தமிழக மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உணர்த்தியுள்ளது. அவற்றில் ஒன்று பாஜகவும், நாம் தமிழர் கட்சியும் தமிழகத்தில் வெற்றி பெறுவது என்பது இயலாத காரியம் என்பது. குறிப்பாக மத்தியில் அதிகாரமிக்க ஆட்சியில் இருந்தாலும் பாஜகவின் செல்வாக்கு தமிழகத்தில் சுத்தமாக இல்லை என்பதுதான் உண்மையாக உணர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் பாஜக காலூன்றுவது குறித்து நடிகர் ராதாரவி கூறியதாவது:‘ஆர்.கே.நகர் தொகுதியில் அதிக வாக்குகள் வாங்கிய டி.டி.வி. தினகரனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஆளும் கட்சியான அ.தி.மு.க இந்த தேர்தலில் பின்னடைவை சந்தித்து இருக்கிறது. இது மக்களுக்கு ஆளும் கட்சி மீதான அதிருப்தியையும் நம்பிக்கையின்மையையும் காட்டுகிறது. அவர்களுக்கு இதைவிட அவமானம் இருக்க முடியாது.

பா.ஜனதாவால் இன்னும் 200 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பது இந்த தேர்தல் மூலம் தெரிய வந்து இருக்கிறது. விஷாலைப் போலவே பா.ஜனதாவும் ஆர்.கே.நகரில் போட்டியிட முடிவு எடுத்தது தவறானது.’’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்