ரஜினி கட்சியால் பாஜகவுக்கு பாதகம் இல்லை: இல கணேசன்!

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (10:52 IST)
யார் எந்த கட்சி ஆரம்பித்தாலும் பாஜகவிற்கு பாதகம் கிடையாது என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி. 

 
ரஜினிகாந்த் சமீபத்தில் அரசியல் கட்சியில் தொடங்கி அரசியலில் ஈடுபடுவதை உறுதி செய்தார். டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிப்பேன் என்றும் வரும் தேர்தலில் தனது கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் கூறினார்.  
 
மேலும் ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனா மூர்த்தி அவர்களும் தலைமை ஆலோசகராக தமிழருவி மணியன் அவர்களையும் அவர் நியமனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், 
 
அர்ஜுன மூர்த்தி புதிதாக பாஜகவில் இணைந்தவர். அவருக்கு ஒரு பொறுப்பு தந்திருந்தோம். அவர் தற்போது ரஜினிகாந்திடம் சேர்ந்து இருக்கிறார். அதனால் எங்களுக்கு எந்த ஒரு இழப்பும் இல்லை. ரஜினிகாந்த், ஜனவரியில் கட்சி ஆரம்பிப்பதாக கூறுகிறார். 
 
குழந்தை பிறந்த பிறகுதான் என்ன பெயர் வைக்க வேண்டும் என யோசிக்க வேண்டும். யார் எந்த கட்சி ஆரம்பித்தாலும் பாஜகவிற்கு பாதகம் கிடையாது. மோடியின் நல்லாட்சி மீது நம்பிக்கை வைத்து இணைந்தால் வரவேற்போம் என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்