மாணவிகளை போல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000: அண்ணாமலை கோரிக்கை

வெள்ளி, 25 மார்ச் 2022 (20:00 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை உயர்கல்வி படிப்பதற்கான வழங்கப்படும் என அறிவித்தார். 
 
தாலிக்கு தங்கம் என்ற திட்டத்தை ரத்து செய்துவிட்டு மாணவிகளின் கல்விக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இந்த உதவித்தொகை அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
 
இந்த நிலையில் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை அளிப்பது போல் மாணவர்களுக்கும் மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். 
 
இந்த கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமா என்பதை இப்பொழுது பார்ப்போம்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்