தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி படுதோல்வி..! பட்டாசு வெடித்து கொண்டாடிய எச். ராஜா..!

Senthil Velan

செவ்வாய், 4 ஜூன் 2024 (18:34 IST)
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இருப்பினும் மத்தியில் பாஜக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகிப்பதால் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்.
 
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.  இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.   
 
முதலில் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளும் எண்ணப்படுகின்றன. பாஜக கூட்டணி 293 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகள் 233 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
 
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு பெரும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஒரு இடத்தில் கூட அதிமுக கூட்டணி மற்றும்  பாஜக கூட்டணி வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் மத்தியில் பாஜக முன்னிலை வகித்து வருவதால் பாஜக தொண்டர்கள் அதனை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பாஜக மூத்த தலைவர் எச். ராஜா பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்