பாஜக ஜெயிக்கும்ணு கணித்து தப்பு பண்ணிட்டேன்! – லைவ் டிவியில் கதறி அழுத கருத்து கணிப்பு நிபுணர்!

Prasanth Karthick

செவ்வாய், 4 ஜூன் 2024 (16:55 IST)
மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் கருத்துக்கணிப்பில் தவறான முடிவை வெளியிட்டதற்காக கருத்துக்கணிப்பு நிபுணர் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலேயே கதறி அழுத சம்பவம் வைரலாகியுள்ளது.



இந்தியாவில் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 1ம் தேதி 7வது கட்ட தேர்தலும் முடிந்த கையோடு பல கருத்துக்கணிப்பு நிறுவனங்களும் இந்தியாவில் பாஜக, காங்கிரஸ் கூட்டணிகள் எவ்வளவு இடங்களில் வெற்றிபெறும், யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது குறித்த கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வந்தனர்.

அவ்வாறாக கருத்துக்கணிப்பில் ஈடுபட்டு ஆக்ஸிஸ் மை இண்டியா நிறுவனம், தேர்தலில் பாஜக கூட்டணி 361 – 401 தொகுதிகளில் பெரும் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸின் இந்தியா கூட்டணி 131-166 இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும், பிற கட்சிகள் 8-20 இடங்களில் வெல்லும் என்றும் கணித்திருந்தது. முக்கியமாக உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் பாஜகவிற்கு அதிக வெற்றி கிடைக்கும் என கணித்திருந்தது.
ஆனால் அந்த கணிப்புகளை பொய்யாக்கியுள்ளது தற்போதைய தேர்தல் முடிவுகள். மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு அவ்வளவு தொகுதிகள் முன்னிலை கிடைக்காததுடன், உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் எதிர்பார்ப்பை விட அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

இதனால் தான் தவறாக கணித்துவிட்டதை எண்ணி ஆக்ஸிஸ் மை இண்டியா நிறுவனர் ப்ரதீப் குப்தா தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியிலேயே கதறி அழத் தொடங்கிவிட்டார். சக நிபுணர்களும், செய்தியாளர்களும் அவரை சமாதானம் செய்து அமர வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Edit by Prasanth.K

Pradeep Gupta crying. ???????? pic.twitter.com/kRRRNv3fsc

— Mohammed Zubair (@zoo_bear) June 4, 2024

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்