கரூர் அடுத்த தாந்தோன்றிமலையில், அமைந்துள்ள கரூர் அரசுக்கலைக்கல்லூரியில், உள்ள ஆடிட்டோரியத்தில் தேசிய அளவிலான விலங்கியல் துறைக்கான கருத்தரங்கு, உயிரிய பல்வகையை பாதுகாப்பதில் மனிதர்களின் புதிய அணுகுமுறை என்ன என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் உயிரியப்பல்வகைமை என்பது உலகில் வாழும் உயிரினங்களின் எண்ணிக்கை, வகை மற்றும் அவற்றின் வேறுபாடுகளைப்பற்றி விளக்கும் அறிவியலாகிய இந்த நிகழ்ச்சியில்., உயிரியப்பல்வகைமை பொருளாதார, கலாச்சார மற்றும் கலைசார்ந்த ஒரு இயற்கைவளமாக இருப்பதினால், அவை பாதுகாப்படுதல் அத்தியாசவசியமாகின்றது. முன்னதாக., இந்த தேசிய கருத்தரங்கின் நடத்தாளரும், விலங்கியல் துறையின் தலைவருமான முனைவர் கே.ராதாகிருஷ்ணன் கருத்தரங்கில் பங்கு பெற்ற அனைவரையும் வரவேற்றார்.