கரூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் 30-வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று (04.02.2019) நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன்., மாவட்ட காவல் கண்கானிப்பாளர் முனைவர் டி.கே.இராஜசேகரன்., முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்ததோடு, கலெக்டர் மற்றும் எஸ்.பி ஆகிய இருவரும் இரண்டு சக்கர வாகனத்தை தலைக்கவசம் அணிந்து வாகனத்தை ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
முதல்நாளான இன்று தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவது குறித்தும்., இரண்டாம் நாளான நாளை(05.02.2019) அதிவேகமாக வானத்தை இயக்குதல் மற்றும் மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும்., மூன்றாம் நாளான 06.02.2019 அன்று சாலை பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் குறித்து கல்லூரி மாணவர்களிடையே விளக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியும்., 07.02.2019 அன்று வாகனங்களில் ஒளிரும் பிரதிபலிப்பான் பட்டைகள் மற்றும் இதர பாதுகாப்பு அம்சங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும்., 08.02.2019 நான்கு வழி மற்றும் ஆறுவழிச்சாலைகளில் எதிர்திசையில் விதிகளை மீறி செல்வதால் ஏற்படும் தீமை குறித்தும்., போக்குவரத்தின்போது சிக்னலில் காட்டப்படும் விளக்குகளின் விளக்கங்கள் குறித்தும எடுத்துரைக்கும் வகையிலான விழி;ப்புணர்வு நிகழ்ச்சிகளும்., அவசரஊர்தி செயல்பாடுகள் குறித்தும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
மேலும்., 09.02.2019 அன்று ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனங்களுக்கு தகுதிச்சான்றுகள் வழங்கப்படவுள்ளது. மாசில்லா பயணம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. 10.02.2019 அன்று நிறைவுநாள் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. வட்டாரப்போக்குவரத்துத் துறையினர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நடத்தப்பட இருக்கின்றார்கள்.