தமிழகத்தில் பீகார் மக்கள் வாக்காளர்களாக இருக்க உரிமை உண்டு: தேர்தல் ஆணையம்

Siva

திங்கள், 4 ஆகஸ்ட் 2025 (10:03 IST)
தமிழகத்தில் பீகாரை சேர்ந்த 6.5 லட்சம் மக்கள் தமிழக வாக்காளர்களாக உள்ளனர் என்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் உள்ள எந்த ஒரு குடிமகனும் எந்த ஒரு மாநிலத்திலும் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ள உரிமை உண்டு என்று தெரிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
 இது தொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட தோ்தல் ஆணையம், ‘அரசமைப்புச் சட்டப் பிரிவு 19 (1) (இ)-இன்படி, நாட்டின் எந்த பகுதியிலும் குடியேறி வசிக்க அனைத்து குடிமக்களுக்கும் உரிமை உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 19 (பி) பிரிவின்படி, ஒரு தொகுதியில் வழக்கமான குடியிருப்பாளராக உள்ள எவரும் அத்தொகுதியில் வாக்காளராக பதிவு செய்து கொள்ளலாம்.
 
தமிழகத்தை சோ்ந்த ஒருவா், தில்லியில் வழக்கமான குடியிருப்பாளராக இருந்தால், தனக்கு தகுதியுள்ள தொகுதியில் வாக்காளராகும் உரிமை அவருக்கு உண்டு. இதேபோல், பிகாரை சோ்ந்தவா் சென்னையில் வழக்கமான குடியிருப்பாளராக இருந்தால், அங்கு அவா் வாக்காளராக பதிவு செய்து கொள்ளலாம். 
 
எனவே, எதிா்க்கட்சித் தலைவா்கள் மக்களை தவறாக வழிநடத்தும் தகவல்களை பரப்ப வேண்டாம்.பிகாரில் இருந்து நிரந்தரமாக இடம்பெயா்ந்து, பிற மாநிலங்களில் வழக்கமான குடியிருப்பாளராக மாறியவா்களின் துல்லியமான எண்ணிக்கை சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு பிறகே தெரியும். எனவே, தமிழகத்தில் 6.5 லட்சம் வாக்காளா்கள் சோ்க்கப்படுவதாக பரப்பப்படும் தகவல்கள் பொய்யானவை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்