பிக்பாஷ் ஜுனியர் பேட்மிட்டன் லீக் போட்டி;8 அணிகளைச் சேர்ந்த 80 வீரர்கள் ஏலம்

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (00:43 IST)
பிக்பாஷ் ஜுனியர் பேட்மிட்டன் லீக்  போட்டிகளில் பங்கேற்க உள்ள 8 அணிகளைச் சேர்ந்த 80 வீரர்கள் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏலம் விடப்பட்டனர். 
 
19 வயதுக்குட்பட்ட வீரர்கள் பங்கேற்கும் பிக்பாஷ் ஜுனியர் பேட்மிட்டன் லீக்  போட்டிகள் கோவை கொடிசியா அரங்கில் 10ம் தேதி தொடங்கி  12ம் தேதி வரை நடைபெற உள்ளது. 13 ஆயிரம் சதுர அடியில் தற்காலிக தளம் அமைத்து நடைபெற உள்ள போட்டிகளில்  8 அணிகளைச் சேர்ந்த 80 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாடு பேட்மிட்டன் அசோசியேசன், கோவை பேட்மிட்டன் அசோசியேசன் மற்றும் வீஎக்ஸ்போ இந்தியா இணைந்து நடத்த உள்ள இப்போட்டிக்கான வீரர்கள் ஏலத்திற்கான நிகழ்ச்சி கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்