ஆயிரம் பேரைக் கடந்த தமிழகம்! புதிதாக 106 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Webdunia
ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (18:10 IST)
தமிழகத்தில் இன்று மட்டும் 106 பேருக்குக் கொரோன இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று தமிழகத்தில் தற்போது வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 106 பேருக்குக் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

நேற்று வரை 969 ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 1075 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 11 பேர் பலியாகியுள்ளதாகவும், 50 பேர் வரை குணமாகி வீடு திரும்பியுள்ளதாகவும் அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் விதமாக தனியார் ஆய்வகங்களிலும் கொரோனா சோதனை செய்யலாம் என்றும் அதற்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என்றும் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்