நேற்று வரை 969 ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 1075 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 11 பேர் பலியாகியுள்ளதாகவும், 50 பேர் வரை குணமாகி வீடு திரும்பியுள்ளதாகவும் அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் விதமாக தனியார் ஆய்வகங்களிலும் கொரோனா சோதனை செய்யலாம் என்றும் அதற்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என்றும் அறிவித்துள்ளார்.