திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை: அதிரடி அறிவிப்பு

Webdunia
திங்கள், 18 அக்டோபர் 2021 (07:21 IST)
திருவண்ணாமலையில் கிரிவலம் செய்ய திடீரென தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் திருவண்ணாமலையில் இந்த மாதம் பவுர்ணமி தினத்தில் கிரிவலம் செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 
 
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கை காரணமாக அக்டோபர் 19ஆம் தேதி காலை 6 மணி முதல் அக்டோபர் 21ஆம் தேதி இரவு 12 மணிவரை கிரிவலம் செய்ய பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் 
 
இதனால் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்லும் பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கோவில்கள் திறக்க அனுமதி அளித்த தமிழக அரசு, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லவும் அனுமதி அளிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்