பகாசுரன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்...

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (16:34 IST)
திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் ஆகிய இரு படங்களும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்க பட்டு வியாபார ரீதியாக வெற்றி பெற்ற திரைப்படங்கள். ஆனால் அந்த படத்தின் கதைக்களம் ஒடுக்கப்பட்ட மக்களை இழிவாக சித்தரிக்கும் விதமாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. அதனால் சர்ச்சைக்குரிய ஒரு இயக்குனராகவே மோகன் ஜி பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில் அவரின் மூன்றாவது படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தில் நடிக்க முன்னணி நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்ராஜ் ஒப்பந்தம் ஆகியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் தலைப்பு பகாசூரன் என்று அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் படத்தின் அடுத்த அபடடெட்  பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் நடிகர் நடராஜ்ஜும், பட்தோ ராதாவியும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். சாம் சிஎஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு  பகாசுரன் பகாசுரன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற வாக்கியத்துடன் மகாபாரத் புத்தகம் இடம்பெற்ற இபபடத்தின் போஸ்டர்  சமீபத்தில் வெளியாகி வைரலானது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்