பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் காரணமாக சென்னையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது என்பதும் அவரது உடல் வைக்கப்பட்டு இருக்கும் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு தலைவர்கள் வருகை தந்து கொண்டிருப்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பதும் திமுக கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்களே இந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்து குற்றவாளிகளை விரைவில் படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் சற்று முன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோர் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு ஆம்ஸ்ட்ராங் உடலை பார்க்க வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 5 தனிப்படைகள் அமைத்து ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வரும் நிலையில் இந்த கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தது ஒரு ஆட்டோ ஓட்டுனர் என்பது என்று அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநர், அந்த ஆட்டுனர் பெரம்பூர் பகுதியை சேர்ந்த திருமலை என்றும் கூறப்படுகிறது. இவரது பெயரில் ஏற்கனவே சில வழக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆம்ஸ்ட்ராங் வீடு உள்ள பகுதியில் இருக்கும் பள்ளி அருகே ஆட்டோவை நிறுத்துவது போல ஒருவாரமாக நோட்டமிட்டு வந்த திருமலை, ஆம்ஸ்ட்ராங் அடிக்கடி தான் கட்டி வரும் வீட்டருகே குறைந்த அளவிலான நண்பர்களுடன் வருவதை நோட்டமிட்டு புன்னை பாலுவுக்கு தகவல் கொடுத்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.