தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக என்றாலே ஜெயலலிதாவின் பெயரில் யாகங்கள், வேண்டுதல்கள், காவடி எடுத்தல், மொட்டை அடித்தல், அலகு குத்துதல், விதவிதமான நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவார்கள். கடந்த முறை ஜெயலலிதா ஜெயிலுக்கு சென்ற போது அவர் வெளியே வர வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், தொண்டர்கள் செய்த ஆன்மீக வழிப்பாடுகளை தமிழ்நாடே அறியும்.
தற்போது இந்த வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை முடிந்துள்ள நிலையில் தீர்ப்பு விரைவில் வர உள்ளது. இதனால் அதிமுக வட்டாரம் பரபரப்பாக உள்ளது. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் பல திருப்பங்களை ஏற்படுத்திய இந்த வழக்கு இன்று வரை அவருக்கு சிம்ம சொப்பனமாகவே உள்ளது.
ஜெயலலிதாவின் உடல்நிலையில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளதை தொண்டர்கள் அறிந்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் அவர் ஜெயிலுக்கு சென்றால் அவருடய நிலமை இன்னும் மோசமாகும் என்பதால், ஜெயலலிதா இந்த வழக்கில் வெற்றி பெறவும், அவருக்கு நல்ல உடல்நிலை கிடைக்கவும் அதிமுகவினர் யாகம், பூஜை, அர்ச்சனை என ஆரம்பித்துள்ளனர்.