திமுக-வுக்கு குழிபறித்த "குடிமகன்கள்" - அடடே.....ரிப்போர்ட்

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2016 (15:28 IST)
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால், உடனே மதுவிலக்கு கொண்டு வரப்படும் என திமுக தலைவர் கருணாநிதி கூறியதால் தான் தமிழக குடிமகன் தேர்தலின் போது, காலை விரிவிட்டதாக கூறப்படுகிறது.
 

 
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது, அதிமுக 134 தொகுகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. திமுக 89 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் படுதோல்வி அடைந்தார்.
 
இந்த நிலையில், திமுக தோல்வி குறித்து, அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசிய போது, தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால், உடனே மதுவிலக்கு கொண்டு வரப்படும் என கருணாநிதி கூறினார்.
 
ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவோ, அதிமுக ஆட்சிக்கு வந்தால்  படிப்படியாக மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என்றார். ஜெயலலிதாவின் இந்த வார்த்தை தான் அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தது.
 
உடனே மதுக்கடைகள் மூடப்படும் என கருணாநிதி கூறியதால் தான், மதுக்குடிப்பவர்கள் பயந்துபோய் அதிமுகவுக்கு வாக்களித்துவிட்டனர். ஒரு தொகுதியில் சுமார் 5000 வாக்குகளாவது இப்படி திசைமாறி சென்றுஇருக்கும். இது போல சில பல செயல்கள் தான் திமுக தோல்விக்கு முக்கிய காரணம் என அடுக்கினார்.
 
அடுத்த கட்டுரையில்