அசானி புயல்: தமிழகத்தில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு !

திங்கள், 9 மே 2022 (15:49 IST)
தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் கடந்த வாரம் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானது. அது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

நேற்று மாலையில் காற்றழுத்தம் புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு இலங்கை நாடு அசானி எனப் பெயரிட்டுள்ளது.

அசானி புயல் வளிமண்டலக் கீழடுக்குச்  சுழற்சி காரணமாக தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக செனை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான அசானி புயல் அடுத்த 48 மணி நேரத்தில் வலுவிழக்கக் கூடும் என தகவல் வெளியாகிறது. அசானி என்றால் பெருங்கோபம் என அர்த்தமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்