தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் தூக்க தடை விதிக்கப்பட்டது குறித்து பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. மதுரை ஆதீனம், மன்னார்குடி ஜீயர் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தருமபுர ஆதீனத்தை நேரில் சந்தித்து முதல்வர் பேசிய பின், பல்லக்கு தூக்க அனுமதி அளிக்கப்பட்டது.
முன்னதாக பல்லக்கு விவகாரம் குறித்து பேசியதால் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக மதுரை ஆதீனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது பேசிய அவர் “அனைத்து ஆதீனங்களும் அரசுடன் ஒத்து போகும்போது நான் மட்டும் ஏன் எதிர்க்க வேண்டும். நானும் அரசுடன் ஒத்துப்போகிறேன். பல்லக்கு தூக்க விடாவிட்டால் அமைச்சர்கள் சாலையில் நடமாட முடியாது என மன்னார்குடி ஜீயர் தெரியாமல் பேசிவிட்டார்” என்று கூறியுள்ளார்.