ஆன்லைன் வழியே அரியர் தேர்வுகள்: தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல்

வியாழன், 15 ஏப்ரல் 2021 (11:45 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அரியர் தேர்வுகள் ரத்து என தமிழக அரசு அறிவித்த அறிவிப்பு செல்லாது என சமீபத்தில் உயர் நீதிமன்றம் தெரிவித்தது என்பதும் அறிய தேர்வுகளை நடத்துவதற்கு உண்டான வழிமுறைகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் அரியர் தேர்வுகளை ரத்து செய்ததை உயர் நீதிமன்றம் ஏற்காத நிலையில் ஆன்லைன் வழியே அரியர் தேர்வுகளை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து நீதிமன்றத்தில் இன்று அளித்த பதிலில் அரியர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்றும் மே மாதம் முதல் அரியர் தேர்வுகளை நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது 
 
இதனை அடுத்து ஆன்லைன் வழியே அரியர் தேர்வுகள் மிக விரைவில் நடத்தப்படும் என்றும் இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்