ஆன்லைனில் நடத்திய தேர்வுகளின் முடிவுகளை வெளியிட்ட அண்ணா பல்கலை!

திங்கள், 12 ஏப்ரல் 2021 (07:58 IST)
கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஆன்லைனில் நடத்தப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் முடிவு அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது
 
கடந்த ஆண்டு நவம்பர் டிசம்பர் மாதங்களில் நடத்தவேண்டிய செமஸ்டர் தேர்வுகளை இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அண்ணா பல்கலை நடத்தியது. நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர் என்பதும் இளநிலை முதுநிலை முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் தேர்வு நடந்தது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது இந்த தேர்வுகளின் முடிவுகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இந்தத் தேர்வு முடிவில் WH99 என்று இருந்தால் அந்த மாணவருக்கு தேர்வு முடிவு பின்னர் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் WH1என்று இருந்தால் அந்த தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக சந்தேகத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
WH13 என்று இருந்தால் கல்லூரி தேர்வு கட்டணம் செலுத்தாதவர் என்று பொருள் ஆகும். இவ்வகை மாணவர்களுக்கு தேர்வு முடிவு வெளியாகி இருக்காது. அதேபோல் அரியர் எழுதிய மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்