தம்பிதுரை அப்பல்லோவில் அனுமதி ...

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (17:15 IST)
அதிமுக கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை தற்போது நெஞ்சுவலியின் காரணமாக அப்பலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல்வரும் அதிமுகவின் நிரந்த பொதுச்செயலாளர் என்று அழைக்கப்பட்டவருமான ஜெயலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அதிமுக சார்பில் அனுசரிக்க்கப்பட்டது.
 
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தம்பிதுரை சென்னை வந்திருந்தார். அப்பொழுது நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்த தருணத்தில் தம்பிதுரைக்கு தீடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
 
இதையடுத்து  தம்பிதுரையின் அருகில்  இருந்த அதிமுக தொண்டர்கள் உடனடியாக அவரின் இந்நிலையை அறிந்து சென்னையில் உள்ள பிரபல அப்பலோ மருத்துவ மனையில் சேர்த்தனர்.
 
தற்போது அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு ஐசியூ பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்