பொன் மாணிக்கவேல் முன்ஜாமீன் மனு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Siva
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (19:13 IST)
பொன் மாணிக்கவேல் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

தமிழக கோயில்களில் சிலைகள் மாயமாவது குறித்து வழக்குகளை விசாரணை செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக பொன் மாணிக்கவேல் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சர்வதேச கும்பலுடன் கூட்டு சேர்ந்து பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியதாக  திருவள்ளூர் டிஎஸ்பி ஆக இருந்த காதர் பாட்ஷா மீது குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தன்னை பலி வாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் டிஎஸ்பி காதர் பாட்ஷா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் பொன் மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த பொன்மாணிக்கவேலுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

ALSO READ: சிவாஜி சிலை விழுந்து நொறுங்கிய விவகாரம்: மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி..!

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்