அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்த பின் அண்ணாமலை பேட்டி

Mahendran
வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (10:49 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வாக்களித்தவுடன் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்பதும் திரை உலக பிரபலங்கள் அரசியல் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் வரிசையில் இன்று வாக்களித்து வருகிறார்கள் என்று செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தனது சொந்த ஊரான ஊத்துப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார்.

அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ’கோவையில் வாக்காளர்களுக்கு பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என்பது பொய்யான தகவல் என்றும் இதனை நிரூபித்தால் தான் அரசியல் விட்டு விலக தயார் என்றும் தெரிவித்தார்

பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்க வேண்டும் என்றும் முழுமையாக இந்த தேர்தல் அறம் சார்ந்து வெளிப்படையாக நடத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்