நாளை திடீரென லண்டன் கிளம்பும் அண்ணாமலை: என்ன காரணம்?

Webdunia
புதன், 21 ஜூன் 2023 (12:42 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கனவே அமெரிக்கா, இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கு சென்றுள்ள நிலையில் நாளை லண்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
நாளை இரவு அண்ணாமலை லண்டன் கிளம்புவதாகவும் லண்டனில் அவர் ஆறு நாட்கள் தங்கி இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
லண்டனில் உள்ள தமிழர்களை அண்ணாமலை சந்திக்க இருப்பதாகவும் தமிழர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு பேச இருப்பதாகவும் அப்போது அவர் மோடி அரசின் சாதனைகளை குறித்து பேச போவதாகவும் கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்கா சென்ற அண்ணாமலை இந்த ஆண்டு பிப்ரவரிய்யில் இலங்கை சென்றார். இந்த நிலையில் தற்போது லண்டன் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்