இத்தனை நாள் தப்பித்ததே ஆச்சரியம்: கைதான பாஜக பெண் குறித்து நடிகை கஸ்தூரி..!
புதன், 21 ஜூன் 2023 (11:02 IST)
இத்தனை நாள் தப்பித்ததே ஆச்சரியம் என சமீபத்தில் கைதான பாஜக பெண் நிர்வாகி உமா கார்கி குறித்து நடிகை கஸ்தூரி தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
விமர்சனம் வேறு , தனி மனித தாக்குதல் வேறு. ஈவேராவை விமர்சிக்கும் வேகத்தில் நடிகர் விஜய்யை மிக தரம் தாழ்ந்து ஏசியது ஏற்கமுடியாத குற்றம். அதை செய்தது பெண் என்பது அதிர்ச்சி. உமாகார்கி பொதுவாகவே வன்மையாக பதிவிடுகிறார் . இத்தனை நாள் தப்பித்ததே ஆச்சரியம்.
நியாயப்படி பார்த்தால் தமிழக பாஜக இவரை முன்னமேயே கண்டித்திருக்க வேண்டும். உமா கார்கி இப்போது தளபதி விஜய் மற்றும் அவர் ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்து போலீஸ் புகாரை வாபஸ் வாங்க வேண்டலாம் என தெரிவித்துள்ளார்.