ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய முடியும்: அண்ணாமலை

செவ்வாய், 7 நவம்பர் 2023 (10:51 IST)
ஆர் எஸ் பாரதியை நாகலாந்து போலீசார் ஜாமினில் வெளிவர முடியாத பிரிவில் கைது செய்ய முடியும் என்றும் அதற்கு முன் தமிழக போலீஸ் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
நாகலாந்து மக்களை அவமானப்படுத்தும் வகையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி பேசி உள்ளதாகவும் இதுவும் கடும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்த அண்ணாமலை  நாகலாந்து காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுக்கப்பட்டால் அவரை 153 ஏ என்ற பிரிவில் ஜாமினில் வெளிவர முடியாத வகையில் கைது செய்ய முடியும். 
 
எனவே நாகலாந்து போலீசார் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக தமிழக போலீசார் அவரை கைது செய்ய வேண்டும் என்று கூறினார்.  இதனை அடுத்து நாகலாந்து ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய தமிழகம்  வருவார்களா? அதற்கு முன்பே தமிழக போலீசார் அண்ணாமலை கூறியது போல் கைது செய்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்