அடுத்த ஆண்டு கனடாவில் நடைபெற உள்ள கேண்டிடேட் செஸ் தொடரில், விளையாடத் தகுதி பெற்றுள்ள உலகின் முதல் சகோதர சகோதரி இணை என்ற பெருமையும் படைத்துள்ள வைஷாலி மற்றும் பிரக்ஞானந்தா இருவரும், உலக அரங்கில் மேலும் பல சாதனைகள் படைத்து, நம் நாட்டையும், நம் அனைவரையும் பெருமைப்படுத்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.