நீட் தேர்வு முடிவு திமுகவிற்கு பாடத்தைக் கற்பிக்கும்: அண்ணாமலை

புதன், 14 ஜூன் 2023 (10:07 IST)
நேற்று நீட் தேர்வு முடிவு வெளியாகி உள்ள நிலையில் அதில் முதல் மாணவராக தமிழகத்தை சேர்ந்த பிரபஞ்சன் வந்துள்ளார். அதுமட்டுமின்றி நீட் தேர்வில் முதல் 10 இடங்களில் நான்கு மாணவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி இருப்பதாவது:
 
இன்று வெளியான நீட் தேர்வின் முடிவுகளில் தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் தேசிய அளவில் முதல் 10 இடங்களுக்குள் வந்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். 
 
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
மருத்துவ படிப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பை உருவாக்கிய நீட் தேர்வை அரசியலாக்கிய திமுகவிற்கு இன்று வெளியான தேர்வு முடிவுகள் தகுந்த பாடத்தைக் கற்பிக்கும் என்று நம்புவோம்!
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்