நேருக்கு நேர் எதிர்பாராமல் சந்தித்த அண்ணாமலை - சசிகலா.. அதன்பின் என்ன நடந்தது?

Mahendran

புதன், 14 பிப்ரவரி 2024 (14:04 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் சசிகலா ஆகிய இருவரும் எதிர்பாராமல் நேருக்கு நேர் சந்தித்த நிலையில் சசிகலா தனது அருகில் அண்ணாமலைக்கு உட்கார இடம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி காலமானதை அடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவரது வீட்டிற்கு இரங்கல் தெரிவிக்க சென்றார். அப்போது அதே இடத்திற்கு சசிகலாவும் வந்திருக்க இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்பாராமல் சந்தித்துக் கொண்டனர். 
 
அப்போது அண்ணாமலை சசிகலாவுக்கு கைகூப்பி வணக்கம் தெரிவிக்க சசிகலாவும் தனது அருகில் அவருக்கு உட்கார இடம் கொடுத்தார். இருவரும் சில நிமிடங்கள் அருகருகே உட்கார்ந்து இருந்த போதிலும் எதுவும் பேசிக் கொண்டதாக தெரியவில்லை. 
 
துக்க வீட்டில் அரசியல் பேசுவது நாகரீகம் இல்லை என்பதால் இருவரும் பேசாமல் உட்கார்ந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அண்ணாமலையை பார்த்தவுடன் தனது அருகில் உட்கார சசிகலா இடம் கொடுத்தது பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்