முன்னாள் முதல்வர் அண்ணாத்துறையின் நினைவுநாளை முன்னிட்டு, இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப்பேரணி நடத்தினர்
ஸ்டாலின்
பேரறிஞர் அண்ணாவின் 51-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி இன்று நடைபெற்றது.
இந்த பேரணியில் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
இதனையடுத்து மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
பின்னர், சமூக வலைதளத்தில் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது :
அரசியல் அறத்தைப் போதித்த காஞ்சி தந்த வள்ளுவன்- கொள்கை உரம் ஊட்டிய இந்நூற்றாண்டின் தலைவன்- பேரறிஞர் அண்ணாவின் 51வது நினைவுநாள் இன்று!
அவரை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு? அவரது கொள்கையும், வாழ்வும் என்றும் நம்மை இயக்குகிறது. அண்ணன் விரும்பிய தமிழகம் அமைக்க சபதம் ஏற்போம் என தெரிவித்துள்ளார்.