கேரளாவில் நடந்த நரபலி சம்பவம்: கேரள முதல்வருக்கு அன்புமணி வேண்டுகோள்!

Webdunia
புதன், 12 அக்டோபர் 2022 (18:18 IST)
கேரளாவில் நரபலி சம்பவம் நடந்த நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
கேரளாவில் 2 தமிழ் பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியபோது கேரளாவில்தான் நரபலி போன்ற மூட நம்பிக்கைகளும் கொடூரங்களும் அதிகமாக நிலவுகின்றன என்றும், வாழ்வாதாரம் தேடி செல்லும் தமிழர்களின் பாதுகாப்பை கேரள அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் பினராயி விஜயன் அவர்களுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்
 
மேலும் தர்மபுரி பகுதியில் வேலை வாய்ப்பு இல்லாததால் மக்கள் வெளி மாநிலங்களுக்கு வேலைக்கு செல்கின்றனர் என்றும் எனவே தர்மபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்