தமிழ்நாடு விரைவில் திவாலாகி விடும்: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

Webdunia
ஞாயிறு, 30 ஜூலை 2023 (09:18 IST)
தமிழ்நாடு 12.5 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளித்து வருகிறது என்றும் விரைவில் திவால் ஆகிவிடும் என்றும் பாளையங்கோட்டையில் அன்புமணி ராமதாஸ் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
பாமக பொதுக்கூட்டம் பாளையங்கோட்டையில் நடந்த நிலையில் அதில் அன்புமணி பேசியபோது ’நெல்லையில் 125 கிலோமீட்டர் பயணம் செய்யும் தாமிரபரணி ஆறு மாசடைந்திருப்பது வேதனை தருகிறது என்று தெரிவித்தார். திராவிட கட்சிகள் தாமிரபரணி ஆற்றை பாதுகாப்பதற்கு எந்த திட்டங்களையும் வகுக்க வில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.  
 
3 தலைமுறைகளை மதுவால் தமிழ்நாடு அரசு அழித்து வந்து கொண்டிருக்கிறது என்றும் மது கடைகளை மூடும் தைரியம் எந்த ஒரு திராவிட கட்சிகளுக்கும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 
 
இந்தியாவில் அதிகமாக கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு தான் என்றும் தமிழ்நாடு மட்டுமே 12.5 லட்சம் கோடி கடனில் தத்தளித்து வருகிறது என்றும் விரைவில் அரசு திவால் ஆகிவிடும் என்றும் அவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.  
 
மக்கள் மிகுந்த கோபத்தில் இருப்பதால் அடுத்த தேர்தலில் பாமக தமிழகத்தில் சமூக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்