தூத்துக்குடியில் ஆலையில் அமோனியா கசிவு.. 20க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!

Mahendran

சனி, 20 ஜூலை 2024 (11:59 IST)
தூத்துக்குடியில் ஆலையில் அமோனியா கசிவால் 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து நடந்த ஆலையில் இன்று எந்தப் பணிகளும் நடக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பணிக்கு வந்த ஊழியர்களை வெளியேற்றவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில் வருவாய்த்துறை, தடயவியல் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலையில் ஆய்வு செய்து வரும் நிலையில் பணிகள் நடக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமோனியா கசிவால் பாதிக்கப்பட்ட 29 பெண்கள் ஒரு தீயணைப்பு வீரர் உட்பட 30 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி அருகே புதூர் பாண்டியாபுரம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வரும் தனியார் மீன்கள் பதப்படுத்தும் ஆலையில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென ஆலையில் மின் விபத்து காரணமாக அமோனியா வாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டது. இதனால் மீன் பதனிடும் ஆலை முழுவதும் அமோனியா வாயு பரவியதால்  16 பெண்கள் 21 பேருக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டது. சிலர் மயக்கம் அடைந்தனர். இதையடுத்து அனைவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்