4 தொகுதி இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!!

Webdunia
திங்கள், 22 ஏப்ரல் 2019 (09:48 IST)
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளின் அமமுக வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
 
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. ஏற்கனவே திமுக இந்த 4 தொகுதிகளுக்கான தங்களின் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில் இன்று  அதிமுகவும், தினகரனின் அமமுகவும் இன்று வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவுள்ளது என செய்திகள் வெளியானது.
அதன்படி சற்று முன்னர் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் 4 தொகுதிகளுக்கான அமமுக வேட்பாளர்களின் பெயரை அறிவித்தார். அவர்களின் விவரம் பின்வருமாறு
 
சூலூர் : சுகுமார்
திருப்பரங்குன்றம் : மகேந்திரன்
ஒட்டப்பிடாரம் : சுந்தர்ராஜன்
அரவக்குறிச்சி : சாகுல் ஹமீது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்