அமர் பிரசாத் ரெட்டி தலைமறைவா? இன்று விசாரணைக்கு வருகிறது முன்ஜாமீன் மனு..!

Siva
புதன், 31 ஜனவரி 2024 (11:38 IST)
பெண்ணை தாக்கிய வழக்கில் பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டி தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது முன் ஜாமின் மனு இன்று நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வருகிறது.  

அமர் பிரசாத் ரெட்டி, அவரது கார் ஓட்டுனர் மற்றும் பாஜக மகளிர் அணியை சேர்ந்த நிவேதா ஆகியோர் ஆண்டாள் என்ற பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரையும் அவரது சகோதரியையும் தாக்கியதாக காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

இதனை அடுத்து அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்ய காவல்துறையினர் தீவிரமாக இருக்கும்  நிலையில் அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அமர் பிரசாத் ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் மனு விசாரணைக்கு வருவதற்கு முன்பே அவரை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்

குஜராத் மும்பை ஆகிய பகுதிகளில் அமர் பிரசாத் ரெட்டியை தனிப்படை போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்