நரிக்குறவ பெண் அஸ்வினி உள்ளிட்ட 4 பேருக்கு கடைகள் ஒதுக்கீடு- மாவட்ட ஆட்சியர் உத்தரவு

வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (19:07 IST)
கடனுதவி கொடுப்பட்டிருந்தும் தடை இல்லை உள்ளிட்ட காரணங்களைக்கூறி தொடர்ந்து வங்கியில் இருந்து கடன் உதவி கிடைக்கவில்லை என்று நரிக்குறவ பெண் அஸ்வினி குற்றச்சாட்டு முன்வைத்த  நிலையில், அவருக்கு கடை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அடுத்துள்ள மகாகபலிபுரம் பகுதியில் உள்ள பூஞ்சேரியில் வசித்து வருபவர் அஸ்வினி. இவர் சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,  பல்வேறு காரணங்கள் கூறி வங்கிகளில் தங்களுக்கு கடன் உதவி கிடைக்கவில்லை என தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில், நரிக்குறவர் பெண் அஸ்வினி உள்ளிட்ட 4 பெண்களுக்கு மாமல்லபுரத்தில் கடைகள் ஒதுக்கீடு செய்து மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் உத்தரவிட்டுள்ளார்.

எனவே, மாவட்ட ஆட்சியர் ராகுல்  நாத் செயலுக்குப் பாரட்டுகள் குவிந்து வருகிறது

kudos to @abpnadu and @Kishoreamutha for bringing this. I request Chief Minister @mkstalin and Minister @RRajakannappan to resolve it.

என்ன இதெல்லாம்? pic.twitter.com/nvMr8PeB9g

— Pamban Mu Prasanth (@Pambanprasanth) August 18, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்